Ghost
![Ghost](/cover/0Gxg29hdCig2gCGc/big/Ghost.jpg)
- Authors
- Ra. Ki. Rangarajan
- Publisher
- Pustaka Digital Media
- Tags
- ghost , ra. ki. rangarajan , tamil , ebook , thriller , novel
- Date
- 2019-06-01T18:30:00+00:00
- Size
- 0.34 MB
- Lang
- ta
பயபக்தியான நாவல்!'பேய் உண்டா இல்லையா?' என்ற கேள்வியை ஒருத்தரிடம் பகலில் கேட்டால் "அதெல்லாம் ஒண்ணுமில்லை, மனப்பிரமை " என்பார், சாயந்தரம் இருட்டுகிற போது கேட்டால், 'நல்ல விஷயமா ஏதாவது பேசுவோமே' என்பார். நடு ராத்திரியில் கேட்டால், 'ப்ளீஸ். எதுவும் பேசாதே, எனக்குப் பயமாக இருக்கு' என்பார்.இருட்டு - வெளிச்சம், சீதம் - உஷ்ணம், சுகம் - துக்கம், லாபம் - நஷ்டம், வெற்றி - தோல்வி, பிறப்பு - இறப்பு என்ற இயற்கையின் அருமைகளை யாரும் மறுக்க முடியாது. கோஸ்ட்கள், பிசாசுகள், ஆவிகள் மீடியம்கள், ஸ்பிரிட் ஆகிய விஷயங்களும் அப்படித்தான் என்கிறார்கள். இறப்புக்கு முன் என்னும் நிலை இருந்தால் இறப்புக்குப் பின் என்ற ஒரு நிலையும் இருக்கத்தான் இருக்கும்.எத்தனையோ பேர் கோஸ்ட்களை, ஸ்பிரிட்டுகளைப் புகைப்படம் பிடித்திருக்கின்றனர். அவை தெளிவாக இல்லையென்றாலும் பதிவாகியுள்ளன. காமெரா ட்ரிக் என்று அந்தப் புகைப்படக் கலைஞர்களை அவமதிக்க இயலாது, ஏனெனில் அவர்கள் மலிவான தந்திரம் செய்கிற சாதாரணவர்கள் அல்ல. விஞ்ஞானிகள், ஒவ்வொரு அசைவுக்கும், காரண காரிய ஆதாரத்தோடே கருத்தை வெளியிடுகிற ஆராய்ச்சியாளர்கள்.தமது இந்த...