Nanavodai Ninaivugal

- Authors
- Era. Kumar
- Publisher
- Pustaka Digital Media
- Tags
- era. kumar , nanavodai ninaivugal , tamil , social , ebook
- Date
- 2019-12-03T18:30:00+00:00
- Size
- 0.14 MB
- Lang
- ta
இறைவன் எனக்கு அளித்த கொடை, ரசனையும் நினைவாற்றலும். சிறு வயது முதலே நல்லன பலவற்றையும் ரசித்திருக்கிறேன். அப்படி ரசித்துச் சுவைத்த காரணத்தாலேயே அவை என் நினைவில் பதிந்திருக்கின்றன. நான் எதையும் திட்டமிட்டதில்லை. ஆனாலும் எதுவும் கெட்டுப் போனதில்லை. பெரிதாக எதையும் நான் எதிர்பார்ப்பதும் இல்லை. என்றாலும் எனக்கு வாய்த்திருக்கிறது. பல பெரிய மனிதர்களுடன் பழகும் அரிய வாய்ப்புகளை இறைவன் எனக்கு அருளியிருக்கிறான். அவனை நான் வழிபடாது இருந்த காலத்திலும் என்னை நன்றாகவே வழி நடத்தியிருக்கிறான்.சிறுவயது முதலே எனது பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான். துன்பங்கள் தொடர்ந்த போது கூட, அதுவும் ஒரு அனுபவம்தான் என்று எண்ணி ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால், சுமைகூட சுகமானதாகவே இருந்திருக்கிறது. படித்தது, பார்த்தது, பலர் சொல்லக் கேட்டது, என்று பலவித அனுபவங்கள் என்னுள் இன்னமும் நீங்காது புதைந்து கிடக்கின்றன. அந்த அனுபவங்களை அசை போடுவதுதான் இந்த நூல்.நினைவுகள் சுகமானவை. அதுவும் சுகமான, சுவையான நினைவுகள் மிகவும் சுகமானவை. இந்த நூல் முழுவதும் அந்த சுகமான நினைவலைகளில் ஆனந்தமாக நீந்திக் கரை...